நாட்டில் உள்ள சிறுவர்களிடையே இன்புளுவன்சா காய்ச்சல் தற்போது அதிகளவில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியல் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனால் நிமோனியா ஏற்படும் அபாயம் இருப்பதால், பெற்றோர்கள் கவனமாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரையில் 35 ஆயிரத்து 118 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றாத நோய்கள் கடுமையான சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.