நாட்டில் நாளாந்தம் வாய்ப் புற்றுநோயால் 3 பேர் உயிரிழப்பதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 புதிய வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் இன்றைய உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஆனந்த ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.