நாட்டில் நுகர்வோருக்கு தட்டுப்பாடு இல்லாமல் அரிசியை வழங்கும் நோக்கில், எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி அறுவடை நடந்து கொண்டிருந்தாலும், தற்போது சந்தையில் அரிசியின் விலை அதிகமாக உள்ளதாகவும் சில வகையான அரிசிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தேவையான அளவு உடைந்த அரிசியை இறக்குமதி செய்வதற்காக விவசாய பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவை நியமிப்பதற்கும் உணவுப் பாதுகாப்புக் குழு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.