NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 10 பெண்கள் கைது!

நேற்று நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களும் 10 பெண்கள் உட்பட 726 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட 25 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகவுள்ள 6 சந்தேக நபர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தச்சுற்றிவளைப்பின்போது 176 கிராம் ஹெரோயின் , 83 கிராம் ஐஸ் , 201 கிராம் கஞ்சா , 10 கிராம் ஹெரோயின் மற்றும் 74 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Share:

Related Articles