NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு…!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டின் (2023) இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதமாக இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் அது 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 48.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் வேலையின்மை விகிதம் 05 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Share:

Related Articles