NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் 217 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டில் சுமார் 217 மருந்து வகைகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் சுகாதாரத் துறையில் பல்வேறு சவால்கள் எதிர்நோக்கப்பட்டு வரும் நிலையில் மருந்து பொருள் தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பதாக துறைசார் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு முழுமையாக நீக்கப்படவில்லை என வைத்தியர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டை இடைவெளியை எதிர்வரும் மாதங்களில் குறைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டை 100 மருந்து பொருட்களுக்கு குறைவாக பேணும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், எனினும் அத்தியாவசியமான மருந்து பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்பொழுது சுமார் 1300 மருந்து வகைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இதில் 383 மருந்து வகைகள் மிக அத்தியாவசியமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாடு நிலவும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

,லங்கையில் சுமார் 217 மருந்து வகைகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் சுகாதாரத் துறையில் பல்வேறு சவால்கள் எதிர்நோக்கப்பட்டு வரும் நிலையில் மருந்து பொருள் தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பதாக துறைசார் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு முழுமையாக நீக்கப்படவில்லை என வைத்தியர் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டை ,டைவெளியை எதிர்வரும் மாதங்களில் குறைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டை 100 மருந்து பொருட்களுக்கு குறைவாக பேணும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

எனினும் அத்தியாவசியமான மருந்து பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் தற்பொழுது சுமார் 1300 மருந்து வகைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் 383 மருந்து வகைகள் மிக அத்தியாவசியமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாடு நிலவும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles