NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் ‘Hello’ பாவனை அதிகரிப்பு – மத்திய வங்கி அறிக்கை வெளியானது!

இலங்கையில் மூன்று கோடியே ஆயிரத்து முந்நூற்று எண்பத்து இரண்டாயிரம் (31,382,000) கையடக்கத் தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

இந்நாட்டின் மக்கள் தொகை சுமார் இரண்டு கோடியே இருபத்தொரு இலட்சத்து எண்பத்தோறாயிரம் ஆகும்.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, நாட்டில் 100 பேர் பயன்படுத்தும் நிலையான வலையமைப்பை (Landline) தொலைபேசிகளின் எண்ணிக்கை 12 ஆகும். இதன் மொத்த எண்ணிக்கை சுமார் இருபத்தாறு இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரம் (2,652,000) ஆகும்.

100 பேர் பயன்படுத்தும் கையடக்கத் தொலைபேசிகளின் எண்ணிக்கை மாத்திரம் 142 ஆகும்.

அதேவேளை, இணைய அடர்த்தி நூறு பேருக்கு 97.8ஆக பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு டிஜிட்டல் தர வாழ்க்கைச் சுட்டெண்ணின் படி, இலங்கை 117 நாடுகளில் 89ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share:

Related Articles