NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டை வந்தடைந்துள்ள உலகின் மிகவும் ஆபத்தான பறவை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று Double Wattled Cassowary பறவைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்றிரவு (05) கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

‘உலகின் மிகவும் ஆபத்தான பறவை’ என்று பெயரிடப்பட்டுள்ள காசோவரி பறவை சுமார் ஐந்து அடி உயரம் வரை வளரும் மற்றும் சுமார் 60 கிலோ எடை கொண்டது.

இரண்டு ஆண் பறவைகளும் ஒரு பெண் பறவையும் தெகிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் குரங்குகள், காட்டுப் பறவைகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளையும் இலங்கை ஏற்றுமதி செய்ய உள்ளது.

Share:

Related Articles