NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு.

லண்டன் ஒக்ஸ்போர்ட் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் ஏற்பாட்டில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில், கலந்துகொண்டு தங்களுடைய உயிர்களை தியாகம் செய்த தியாக மறவர்களைப் போற்றும் விதமாக அவர்களுடைய 50ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி காலை முதல் மாலை வரை இடம்பெற இருப்பதுடன் அதற்கு முன்னைய இரு தினங்களும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

லண்டனில் இருக்கின்ற தமிழர்கள் அனைவரும், வீரத் தமிழர் முன்னணி ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரித்தானிய நாம் தமிழர் உறவுகள் அனைவரையும் இந்நிகழ்வில் பங்குகொள்ளுமாறு பேராசிரியர் செந்தில்நாதன் கேட்டுக்கொள்கின்றார்.உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வரலாற்றுப் பேராய்வாளர்கள் மற்றும் மொழி ஆய்வாளர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துகொள்ள இருக்கின்றார்கள் என பேராசிரியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles