(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கண்டறியப்படாத கொடிய சுவாச நோய் நாய்க்குட்டிகள் மத்தியில் பரவி வருவதாக கால்நடை மருத்துவர் உபுல் சாகர திலகே தெரிவித்துள்ளார்.
இந்த சுவாச நோய்க்கு இதுவரை வெற்றிகரமான சிகிச்சை இல்லை என்றுக்கூறும் அவர்இ பாதுகாப்பான முறைகளை பின்பற்றி 8 மாதங்களுக்குள் செல்லப்பிராணிகளை பராமரிக்க வேண்டும் என்கிறார்.
மூச்சுத் திணறல் மற்றும் விரைவான சுவாசம் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஈறுகளின் நிறமாற்றம் (வெளிர்வு) பசியின்மை சோம்பல் இதன் அறிகுறியாகும், மேலும் இது கலப்பினங்களிடையே வேகமாகப் பரவி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய பிரதேசங்களில் இந்நோய் பரவலாகப் பரவியுள்ளதுடன், கம்பளை, நாவலப்பிட்டி, கினிகத்தேன, ஹட்டன் ஆகிய பிரதேசங்களில் 80 சதவீதமான நாய்க்குட்டிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக, தயிர், பசும்பால் உள்ளிட்ட குளிர்ச்சியான உணவுகளை உண்பதைத் தவிர்க்கவும், 4,5 மாதங்களுக்கு குளிப்பாட்டுவதை தவிர்க்கவும் சாகர திலகா கேட்டுக்கொண்டுள்ளார்.