NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாளை முதல் நடமாடும் தேங்காய் விற்பனைத் திட்டம்..!

தேங்காய் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சுற்றுச்சூழல், வனவிலங்கு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சகம் “நடமாடும் தேங்காய் விற்பனைத் திட்டத்தை” நாளை (23) ஆரம்பிக்கவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாகக் கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை மற்றும் கடுவெல ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு, வெலிக்கடை, கிருலப்பனை மற்றும் நிதி அமைச்சினைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் ஊடாக தேங்காய் கொள்வனவு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனூடாக, நுகர்வோர் ரூ. 100 -120 வரையில் தேங்காய்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனச் சுற்றுச்சூழல், வனவிலங்கு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Share:

Related Articles