NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IMF நிதி வசதி முன்மொழிவு திட்டம் மீதான விவாதம் இன்று!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியளிப்பு வசதியின் முன்மொழிவு மீதான விவாதம் பாராளுமன்றில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

குறித்த விவாதம் நாளையும் நாளை மறுதினமும் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தில் விரைவான முன்னேற்றத்தை அடைவதற்காக, அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் எட்டப்பட்ட நிதி வசதி தொடர்பான ஏற்பாடு கடந்த மாதம் 22ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பான செயற்பாடுகளுக்கு தேவையான அனுமதியை நாணயம், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சுக்கு வழங்க வேண்டும் என பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று நாள் விவாதத்திற்குப் பிறகு, தேவைப்பட்டால் வாக்கெடுப்பும் நடத்தப்படும் என்று பாராளுமன்றத்தின் தகவல் தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles