நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட வு20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது.
அதன்படி வு20 தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதியும் ஒருநாள் போட்டிகள் ஜனவரி 5, 8 மற்றும் 11 ஆகிய திகதிகளிலும் நடைபெற உள்ள நிலையில் இந்தத் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க நீண்ட நாட்களுக்கு பின்னர் இடம்பெற்றுள்ளார்.
அதன்படி, சரித் அசலன்க, பதும் நிசங்க, அவிஷ்க பெர்னண்டோ, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நுவனிது பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே, சமிது விக்ரமசிங்கே, அசித பெர்னண்டோ, முகமது சிராஸ், லஹிரு குமரா மற்றும் எஷன் மலிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.