நேற்றைய தினம் ஜப்பான் செல்லும் வழியில் நியூசிலாந்து பிரதமரின் விமானம் செயலிழந்துள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் தெரியவருகையில், நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் பயணம் செய்த, நியூசிலாந்து தற்காப்புப் படைக்குச் சொந்தமான போயிங் 757 ரக விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பப்புவா நியூ கினியில்தரையிறங்கியபோது அது எதிர்பாராத விதமாக செயலிழந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர் வர்த்தக விமானமொன்றில் ஜப்பான் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.