NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி!

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட T20 தொடரில் விளையாடியது.

இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி T20 போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களை குவித்தது.

இதனையடுத்து 219 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை ஆறுதல் வெற்றி பெற்றது.

Share:

Related Articles