NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நிரந்தர ஓய்வூதியத்துடன் அரச ஊழியர்கள் நியமனம்..! அமைச்சரவை அங்கீகாரம்

உள்ளூராட்சி மன்றங்களில் நிரந்தர ஓய்வூதியத்துடன் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிரதமரும், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே இவ்வாறு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் பணியாற்றும் 8,435 பேர் நிரந்தர நியமனம் பெறவுள்ளனர்.

இந்த நிலையில், நியமனக் கடிதங்களை விரைவாக வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அண்மையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

அதன்படி, அந்த நியமனக் கடிதங்கள் அனைவருக்கும் ஜூலை மாதத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles