NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நிர்மாணப் பணிகளுக்காக மட்டுப்படுத்தப்படும் வீதி போக்குவரத்து..!

கொஹுவல சந்தியில் நிர்மாணிக்கப்படும் மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக இன்று (15) முதல் குறித்த வீதியூடனான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதன்படி, குறித்த வீதியில் வாகன போக்குவரத்து 02 மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலும்,கொழும்பில் இருந்து பிலியந்தலை செல்லும் வீதியில் கொஹுவல சந்தியில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அது ஓகஸ்ட் 15ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பயணத்தை எளிதாக்க மாற்று வழிகளைப் பயன்படுத்தவும். ” எனத் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles