நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் தரையிறங்கிய இடத்திலிருந்து சற்று தொலைவில் குகையொன்று இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த குகையானது, எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்குச் செல்பவர்கள் தங்குவதற்கு இலகுவாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இக் குகை குறைந்தபட்சம் 40 மீட்டர் அகலமும் பல நூறு மீட்டர் நீளமும் இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறு நிலவில் அமைந்திருக்கும் குகைகள், 50 வருடங்களுக்கும் மேலாக மர்மமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தக் குகைகள் சூரியக் கதிர்வீச்சு மற்றும் மைக்ரோ விண்கல் போன்றவற்றின் தாக்குதல்களிலிருந்து விண்வெளி ஆராய்ச்சியாளர்களை பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.