NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீண்ட கூந்தலுக்கு ஜப்பானிய இராணுவத்தில் அனுமதி…!

இராணுவத்தில் புதிதாக இணைபவர்கள் நீளமாக முடி வளர்ப்பதற்கு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் குறித்த புதிய நடைமுறை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், புதிய விதிகளின்படி பெண்களும் நீண்ட கூந்தலை வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் உலகின் வயதான மக்கள் தொகை, குறைந்த ஊதியம் போன்ற காரணங்களால் ஜப்பான் இராணுவத்தில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles