NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து ஹிருணிக்கா பிரேமச்சந்திர விடுதலை..!

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (04) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களை மீளப் பெறுவதாகவும், இனிமேல் இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் அறிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles