கிளிநொப்பி – பரந்தன் பூநகரி வீதியின் செல்வி புரம் பகுதியில் வீதியின் கரையில் நீரினுள் முழ்கிய நிலையில் சடலம் ஒன்று இனம்காணப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது பூநகரி பள்ளிக்குடா பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய முதியவரே சடலமாக இனம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.