சிலாபம் தெதுரு ஓயாவில் நேற்று (14) நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கியவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும், மற்றைய நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் அவர் தனது மனைவி மற்றும் மூன்று பேருடன் தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.