NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீருக்கடியிலான முதலாவது மெட்ரோ புகையிரத சேவை ஆரம்பம்…!

இந்தியாவின்  நீருக்கு அடியிலான முதலாவது மெட்ரோ புகையிரத சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.

கொல்கத்தாவின் கிழக்கு – மேற்கு மெட்ரோ புகையிரத மார்க்கத்தில் ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் ஆகிய நகரங்களுக்கு இடையே நீருக்கு அடியில் இந்த புகையிரத சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

4.8 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த மார்க்கத்தில் ஹுக்ளி என்ற ஆற்றை கடக்க தரையிலிருந்து 32 மீற்றர் ஆழத்தில் 520 மீற்றர் நீளத்துக்கு இந்த மெட்ரோ புகையிரத மார்க்கத்தில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 4,965 கோடி இந்திய ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன

Share:

Related Articles