கலா ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, நொச்சியாகம, இராஜாங்கனை, வனாத்தவில்லுவ, கருவலகஸ் கங்கையை அண்மித்த பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த தாழ்நில பகுதி மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.