NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நுகர்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி!

VAT வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்ய சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கு அமைய, 2024இல் அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக பெறுமதி சேர் வரி 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சேவை மற்றும் விநியோகத்திற்கான பெறுமதி சேர் வரி 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் VAT வரி அதிகரிப்பின்றி அதிகளவான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு லங்கா சதொச நிறுவனம் வழங்கவுள்ளது.

அதனடிப்படையில், வாடிக்கையாளர்களுக்கு சவர்க்காரம், கொலோன், பவுடர், பிஸ்கட் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பல பொருட்களை VAT இன்றி பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சதொச தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக லங்கா சதொச நிறுவனத்திடமிருந்து பல அத்தியாவசியப் பொருட்களை நடைமுறையில் உள்ள சந்தை விலைகளை விட மிகக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles