NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நுண்நிதி கடனில் சிக்குண்டு இருநூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை!

அண்மை காலமாக நுண்நிதி கடன் வலையில் சிக்குண்டு இருநூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சனத்தொகை புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சுமார் 28 இலட்சம் பேர் நுண்நிதி கடன் வலையில் சிக்கியுள்ள நிலையில் அவர்களில் 2,40,000 பேர் பெண்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பது தொடர்பான துறைசார் கண்காணிப்பு குழுவில், நுண்கடன் நிறுவனங்கள் 38% முதல் 48% வரை அதிக வட்டியில் கடன்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவில் பெண்கள் வீட்டு வேலைக்குச் சேர்வதும் நுண்கடன் கடன் நெருக்கடிக்கு காரணம் என கூறப்படுகிறது.

Share:

Related Articles