NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் சேவை 100 நாட்களுக்கு முடக்கம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 03ஆவது அலகு 100 நாட்களுக்கு மூடப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஜூன் 13ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கு மின் உற்பத்தி நிலையத்தின் 03ஆவது அலகு மூடப்படும் என அமைச்சர் தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் மின்வெட்டு இருக்காது எனத் தெரிவித்த அமைச்சர், பாரிய பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும் இந்த காலப்பகுதியில் ஏனைய அனல் மின் நிலையங்களுடன் இணைந்து அதனை நிர்வகித்து மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles