வறட்சியினால் நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களை மதிப்பிடும் பணியை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் வடமத்திய மாகாண விவசாயப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் சபையின் தலைவர் டபிள்யூ.எம்.எம்.பி. வீரசேகர ஆகியோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக விவசாய அமைச்சு கூறுகிறது.
பயிர் சேதத்திற்கு நட்டஈடாக ஹெக்டேருக்கு 100,000 ரூபா வழங்கினாலும் அது போதாது எனவும் மஹிந்த அமரவீர இங்கு குறிப்பிட்டுள்ளார்.
இழப்பீடு தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதாகவும், காப்புறுதி சபையின் ஊடாக நட்டஈடு வழங்கப்படுமென எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.