நாட்டில் நெல்லுக்கு விரைவில் உத்தரவாத விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், எதிர்வரும் சில நாட்களில் நெல்லுக்கான உத்தரவாத விலை தொடர்பில் அறிவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் விளைச்சலுக்கு உரிய விலையை பெற்றுக் கொள்வதற்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு முதல் தடவையாக தீர்வு கிடைத்துள்ள நிலையில், வரலாற்றில் முதல் தடவையாக இந்த வெற்றி கைக்கூட உள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், நெல் உற்பத்திக்கான செலவுகளுடன், 30 சதவீதத்தை அதிகரித்து, நெல் விலையை நிர்ணயம் செய்யுமாறு கோரி உள்ளதாகவும் தெரிவித்த அவர், நெல் உற்பத்திக்கான செலவு குறித்து அமைச்சின் 5 நிறுவனங்களினால் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அதன்படி, எதிர்வரும் சில தினங்களில் நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவிக்க முடியும் என விவசாய பிரதி அமைச்சர நாமல் கருணாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.