NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நெஷனல் சுப்பர் லீக் தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பம்!

இலங்கை கிரிக்கெட் அணியில் பல திறமையான வீரர்களை உள்வாங்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட நெஷனல் சுப்பர் லீக் தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இந்த தொடரில் காலி, கண்டி, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ளை ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஐந்து அணிகள் பங்கேற்கும் இப்போட்டி ஓகஸ்ட் 27 முதல் ஒக்டோபர் 6 வரை நடைபெறும்.

ஒவ்வொரு அணியும் முதல் சுற்றில் 8 ஆட்டங்களில் விளையாடி அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஒக்டோபர் 6 ஆம் திகதி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

Share:

Related Articles