நேபாளத்தின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கேபி ஷர்மா ஒலி, முந்தைய கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, நேபாளத்தில் கடந்த ஒருவாரகாலமாக நிலவிவந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, ஷர்மா ஒலி இன்று (15) பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபாளி காங்கிரஸ் கட்சி ஆகியவற்றைக் கொண்ட கூட்டணி அரசாங்கத்திற்கு ஷர்மா ஒலி தலைமைதாங்குவார் என குறிப்பிடப்படுகிறது.
கூட்டணியில் அங்கம் வகித்த ஒலி கட்சி, புதிய கூட்டணியில் சேருவதற்கான ஆதரவை மீளப் பெற்றதையடுத்து, புஷ்ப கமல் தஹால் தலைமையிலான அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை கவிழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து 166 சட்டமியற்றுபவர்களின் ஆதரவுடன் ஷர்மா ஒலி பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ராம்சந்திர பவுடல் ஒலியை பிரதமராக நியமித்துள்ள நான்காவது சந்தர்ப்பம் இதுவாகுமென குறிப்பிடப்படுகிறது.
இதன்படி, ஷர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவை அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.