NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நேபாளத்தில் பஸ் கவிழ்ந்ததில் இரண்டு பேர் பலி – 34 பேர் காயம்!

மேற்கு நேபாளத்தில் வீதியை விட்டு விலகிச் சென்ற பஸ் கவிழ்ந்ததில் இரண்டு பேர் பலியாகியுள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர். 

தனாஹு மாவட்டத்தின், கன்சிகுவாவில் அதிகாலை 5.30 மணியளவில் தரனில் இருந்து பொக்காரா நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த பஸ், சாலையை விட்டு விலகி சாலையில் இருந்து 10 மீட்டர் கீழே விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பயணிகள்  மற்றும் பஸ் ஓட்டுநர் உட்பட 32 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

காயமடைந்தவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் மேல் சிகிச்சைக்காக பொக்ராவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்து குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். 

Share:

Related Articles