NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நேபாளத்தில் விமான விபத்து – ஐவர் பலி!

நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் (TIA) சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் CRJ-200 விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

குறித்த விமானம் 19 பேருடன் பயணித்ததாகவும், புறப்பட்டு சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles