NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நேபாளத்தில் 6 பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் மாயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நேபாளத்தில் இன்று (11) 6 பேர் பயணித்த ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளதாக வான் பயண நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

மெக்ஸிகோவைச் சேரந்த 5 சுற்றுலா பயணிகளும் இந்த ஹெலிகொப்டரில் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏவரெஸ்ட் பிராந்தியத்திலுள்ள லுக்லாவுக்கு அருகிலிருந்து தலைநகர் காத்மண்டுவை நோக்கி இன்று காலை 10.04 மணியளவில் இந்த ஹெலிகொப்டர் புறப்பட்டுள்ள நிலையில், 10 நிமிடங்களின் பின்னர் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது என மானாங் எயார் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles