நைஜீரியா நாட்டின் நைஜர் மாகாணம் மொக்வா நகரில் உள்ள ஆற்றில் நேற்று 100 பேர் படகில் பயணித்துள்ளனர்.அண்டை நகரில் விவசாய பணிக்காக இவர்கள் படகில் சென்றுள்ளனர்.
நைஜர் ஆற்றில் பயணம் மேற்கொண்டபோது இவர்கள் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 30 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.
இந்த படகு விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.