நைஜீரியாவில் நேற்று அதிக நபர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்ததோடு, 70 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின், தாரபா மாநிலத்தில், உள்ள பெனி ஆற்றில், நேற்று முன் தினம் அர்டோகோலா மாவட்டத்தின் மீன் சந்தையில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் படகில் வீடு திரும்பிய போது படகு பாரம் தாங்காமல் நடுவழியில் கவிழ்ந்தது. இதையறிந்த உள்ளூர்வாசிகள் மற்றும் மீனவர்கள் நீரில் தத்தளித்தவர்களை மீட்க உதவினர்.
தகவலறிந்து மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில், 14 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 17 பேர்களின் சடலங்கள் கிடைத்துள்ளன. 73 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். ஆற்றில் நீரின் வேகம் அதிகம் இருப்பதால் மீட்புப் பணி சிக்கலாகியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் நைஜர் மாநிலத்தில் 300 நபர்களுடன் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 103 பேர் பலியான சோகம் சம்பவம் நிகழ்ந்தது.