NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நைஜீரியாவில் 40 விவசாயிகள் சுட்டுக்கொலை!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஆயுதமேந்திய கும்பல்கள் செயல்பட்டு வரும் நிலையில், பழமைவாதிகளான இவர்கள் மேற்கத்திய கலாசார தழுவலை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

அந்தவகையில், விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்பட்டு வரும் விவசாயிகள் வசிக்கும் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அங்குள்ள போர்னோ மாகாணத்தின் மோகுன்னே கிராமத்துக்குள் நேற்றிரவு ஆயுதமேந்திய கும்பல் ஒன்று புகுந்து அங்குள்ள விவசாயிகளை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் 40 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles