NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பங்களாதேஷ் – மேற்கிந்திய தீவுகள் தொடர்: முதல் நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 250 ஓட்டங்கள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

இதில் முதலில் டெஸ்ட் தொடரும், அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் T20 தொடர்களும் நடைபெறவுள்ளன.

இந்த தொடர் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. அதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட் 4 ஓட்டங்களில் தோல்வியுற்றார்.

4வது விக்கெட்டுக்கு மைக்கேல் லூயிஸ் உடன் அலிக் அத்தான்ஸ் ஜோடி நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடிய நிலையில், இந்த ஜோடி 140 ஓட்டங்னளை எடுத்தது.

இறுதியில், முதல் நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 250 ஓட்டங்களை எடுத்துள்ளது.

Share:

Related Articles