NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பட்டமளிப்பு விழாவில் தரையில் விழுந்தார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அமெரிக்காவின் கொலராடோவில் நடைபெற்ற விமானப்படை பட்டமளிப்பு விழாவின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தரையில் விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எனினும், கீழே விழுந்ததில் ஜனாதிபதிக்கு காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜோ பைடன் அமெரிக்காவின் மிகவும் வயதான ஜனாதிபதி என்பதுடன் முந்தைய காலங்களிலும், அவர் தரையில் விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ்விழாவில் பட்டம் பெற்ற 921 அதிகாரிகளுடன் ஜனாதிபதி கைகுலுக்கிய போது மேடையிலேயே கால் இடரி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles