NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பணம் அச்சிடும் நடவடிக்கைகளுக்கு கடும் கட்டுப்பாடு!

புதிய மத்திய வங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டதினூடாக பண அச்சிடல் செய்வதற்கு அரசாங்கத்துக்கு இருந்த வாய்ப்பு கடுமையாக தடைப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். 

இந்தச் சட்டத்தினூடாக மத்திய வங்கியை மேலும், சுயாதீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

புதிய மத்திய வங்கி சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கி தொடர்ந்து சுதந்திரமாக இருக்கும் என்பதே இதன் சிறப்பு அம்சமாகும். பண அச்சிடல் என்பது கடந்த காலங்களில் பேசுபொருளாக இருந்தது. புதிய மத்திய வங்கிச் சட்டத்தின்படி, பணத்தை அச்சிடுமாறு மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுப்பதற்கு அரசாங்கத்துக்கு இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த சட்டத்தின் மூலம் திறைசேரி செயலாளர் மத்திய வங்கியின் நிர்வாக சபையில் பங்குபற்றுவதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles