NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பணம் கேட்டுச் சென்ற நபரை கொலை செய்த நண்பர்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சிறிமங்கல வீதி 4ஆம் லேன் பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தனது நண்பரிடம் 3,500 ரூபா பெறச் சென்ற போது ஏற்பட்ட உரையாடலின் விளைவே இந்தக் கொலைச் சம்பவம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (29) மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் உயிரிழந்தவர், தனது நண்பரின் வீட்டிற்குச் சென்று தனது நிலுவைத் தொகையான 3,500 ரூபாய் பெற்றுக்கொண்டு வருவதாகக்கூறியுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் நண்பர்கள் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல், கைகலப்பாக மாறிய நிலையில், பணம் கேட்டு சென்ற நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கிரிபத்கொடை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 41 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles