எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை தடுக்க விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.