NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதவி விலகத் தயார் – பார்சிலோனா பயிற்றுவிப்பாளர் ‌ஸாவியின் அதிரடி அறிவிப்பு!

அணி தன்மீது நம்பிக்கை இழந்தால் தான் பதவி விலகத் தயாராக இருப்பதாக பார்சிலோனா கால்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் ‌ஸாவி ஹெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற ஸ்பானிய சூப்பர் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் பார்சிலோனா, ரியால் மட்ரிடிடம் 4-1 எனும் கோல் கணக்கில்; தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்தே ஸாவி இவ்வாறு அறிவித்துள்ளார்.

இந்தப் பருவம் தற்காப்பு ஆட்டத்தில் பார்சிலோனா அணி, லா லீகா லீக்கில் இதுவரை 22 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது.

இந்நிலையில், பிரச்சினைகளைத் தன்னால் சரிசெய்ய முடியும் என்று ‌நம்புவதாகவும், ஆனால், நிலைமை சீராகாவிட்டால் பதவி விலகவும் தயாராய் இருப்பதாக ஸாவி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles