இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.
தனது கருத்துக்களுக்கு சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டமையை அடுத்து அவர் இவ்வாறுபதவி விலகியுள்ளார்.
அதேநேரம், இந்த கருத்துக்காக அமைச்சு மற்றும் இலங்கை மின்சாரசபை ஆகிய இரு தரப்புக்காகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மன்னிப்பை கோரியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், “பிள்ளைகள் தேவைப்பட்டால் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி படிக்க வேண்டும்” என்று நோயல் பிரியந்த கூறியமை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதே போன்ற நிலைமைகளின் கீழ் படிப்பில் சிறந்து விளங்கிய முந்தைய தலைமுறையினரின் முன்மாதிரியை அவர் தமது கருத்தின்போது மேற்கோள் காட்டியிருந்தார்.
எனினும், விமர்சனங்களைத் தொடர்ந்து, பேச்சாளர் தனது பதவியிலிருந்து விலக முன் வந்துள்ளார். மேலும், இவ்வாறு கருத்து தெரவித்தமைக்கு பகிரங்கமாக மன்னிப்பையும் கோரியுள்ளார்.
மேலும், குறித்த கருத்து தொடர்பில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்