முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை கோட்டாபய ராஜபக்சவிடம் அவர் கையளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
சுகீஸ்வர பண்டார தனது மின்னஞ்சலில் “தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக பதவியில் இருந்து நான் இராஜினாமா செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த கடிதத்தில் தனக்கு பிரத்தியேக செயலாளர் பதவியினை வழங்கியிருந்தமைக்காக நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







