NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதில் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சர்கள் நியமனம்!

புதிய பூகோள நிதியுதவி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இன்று அதிகாலை எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ. கே 649 என்ற விமானத்தினூடாக ஜனாதிபதி நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

ஜனாதிபதி வெளிநாட்டு விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பும் வரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 அதேவேளை பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Share:

Related Articles