NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதிவு செய்யப்படாத கல்வி நிறுவனம் – மேலும் 5 சந்தேக நபர்கள் கைது!

கைதுசெய்யப்பட்டவர்கள் 23, 25 மற்றும் 26 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் புவக்பிட்டிய, பல்லேவெல, தெமட்டகொட, பொலன்னறுவை மற்றும் மத்துகம ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டியில் பதிவு செய்யப்படாத கல்வி நிறுவனம் ஒன்றின் செயற்பாட்டிற்கு உடந்தையாக இருந்த மேலும் ஐந்து சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 23, 25 மற்றும் 26 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் புவக்பிட்டிய, பல்லேவெல, தெமட்டகொட, பொலன்னறுவை மற்றும் மத்துகம ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (06) முற்பகல் அளுத்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா ஒரு இலட்ச ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

“Evolve College of Education” என்ற பெயரில் இயங்கிய குறித்த கல்வி நிறுவனம் பம்பலப்பிட்டி லொரீஸ் வீதியில் அமைந்துள்ளதோடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு தேவையான டிப்ளோமாக்கள் மற்றும் உயர் டிப்ளோமாக்கள் போன்ற கல்வித் தகைமைகளை வழங்குவதாக சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்திருந்தது.

இதேவேளை, குறித்த போலி கல்வி நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்ட கிரியுல்ல நாரங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டு, பின்னர் இலட்ச ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

சட்டப்பூர்வ அனுமதியின்றி கல்விச் சேவைகளை வழங்கிய பின்னர் போலி டிப்ளோமா சான்றிதழ்களையும் குறித்த கல்வி நிறுவனம் வழங்கியுள்ளதுடன், இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 43 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles