NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 15 பேர் பலி!

பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பியில் ஏற்பட்ட பெரும் கலவரம் மற்றும் அமைதியின்மையினால் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,, 

அதாவது சம்பள முரண்பாடுகள் காரணமாக அந் நாட்டு பொலிஸார் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதை அடுத்து கலவரம் வெடித்தது.

இந்நிலையில் வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் என்பன தீயிட்டுக் கொழுத்தப்பட்ட அதேநேரம், பல்பொருள் அங்காடிகளும் சூறையாடிப்பட்டுள்ளன.

இருப்பினும் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் எட்டு பேர் இறந்தனர், நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலும் ஏழு பேர் கொல்லப்பட்டதாக அவுஸ்திரேலிய ஒலிபரப்பு சேவையினை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமது சம்பள குறைப்புக்கு எதிராக புதன்கிழமை முதல் பொலிஸார் அங்கு பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பிரதமர் ஜேம்ஸ் மராப், சம்பள குறைப்பினை ஏற்படுத்திய நிர்வாக பிழையினை சரி செய்வதாக கூறியுள்ளார். 

Share:

Related Articles