NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பம்பலப்பிட்டி புகையிரத நிலைய நடைபயணிகள் மேம்பாலம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு…!

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக நடைபயணிகள் மேம்பாலம் இன்று மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

குறித்த புகையிரத நிலையத்தின் மேம்பாலம் சேதமடைந்திருப்பது தெரியவந்திருந்த நிலையில், குறித்த மேம்பாலம் தொடர்பில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினர் ஆய்வுகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்தநிலையில், புதிய நடைபயணிகள் மேம்பாலம் ஒன்றை நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய, புதிய மேம்பாலம் அமைக்கப்படும் வரையில் தற்காலிக பாலம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அது இன்றைய தினம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles