NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பயணச்சீட்டு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் விசேட அறிவித்தல்!

முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான பயணச்சீட்டு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் புகையிரத திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

புகையிரத இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை உள்ளிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், புகையிரத நிலையத்திற்குள் பிரவேசிக்கும் போது மற்றும் பயணச்சீட்டைச் சரிபார்க்கும் போது பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை சரிபார்த்து உறுதிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான பயணச்சீட்டு பணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்கும் போது பயணச்சீட்டு உரிமையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த பயணிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டின் நகலை புகையிரத நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles